தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப்
பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு
மனக்கவலையை மாற்ற முடியாது.
Transliteration:
Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal Manakkavalai Maatral Aridhu
Explanation
Anxiety of mind cannot be removed, except from those who are united to
the feet of Him who is incomparable.