கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல
திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற
கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
Transliteration:
Katradhanaal Aaya Payanenkol Vaalarivan Natraal Thozhaaar Enin
Explanation
What Profit have those derived from learning, who worship not the good feet of Him
who is possessed of pure knowledge ?